இயல் ஒன்று - கவிதை பேழை - இன்ப தமிழ் ****************************************************************************************** சொல்லும் பொருளும் நிருமித்த - உருவாக்கிய விளைவு - விளைச்சல் சமூகம் - மக்கள் குழு அசதி - சோர்வு பிரித்து எழுதுக அமுதென்று - அமுது + என்று செம்பயிர் - செம்மை + பயிர் சேர்த்து எழுதுக நிலவு + என்று = நிலவென்று தமிழ் + எங்கள் = தமிழெங்கள் கோடிட்ட இடங்களை நிரப்புக 1. ஏற்ற தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் 2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு அசதி ஆக இருக்கும் பொருத்துக 1. விளைவுக்கு - நீர் 2. அறிவுக்கு - தோள் 3. இளமைக்கு - பால் 4. புலவர்க்கு - வேல் குறுவினா 1. பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள் யாவை? பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள் *அமுது *நிலவு *மணம் 2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்? நாங்கள் தமிழை அமுதோடு ஒப்பிடுவோம் VI . சிறுவினா 1. இன்பத்தமிழ் - பாடலில் உங்களுக்கு பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக. தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது? பயிர் செழிக்க உதவுவது நீர். அது போல தமிழ்ச்சமுதாயமாகிய பயிர் செழித்து வளர உதவுவது தமிழ். இதுவே விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு ஆகும். தமிழ்க்கும்மி ****************************************************************************************** சொல்லும் பொருளும் 1. ஆழிப்பெருக்கு - கடல் கோள் 2. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி 3. மேதினி - உலகம் 4. உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை பிரித்து எழுதுக 1. செந்தமிழ் - செம்மை + தமிழ் 2. பொய்யகற்றும் = பொய் + அகற்றும் சேர்த்து எழுதுக 1. பாட்டு + இருக்கும் - பாட்டிருக்கும் 2. எட்டு + திசை = எட்டுத்திசை III கோடிட்ட இடங்களை நிரப்புக 1. தமிழ்க்கும்மி பாடலை எழுதியவர் +பெருஞ்சித்திரனார்+ 2. +தமிழ்க்கும்மி+ என்னும் பாடல் இடம்பெற்ற நூல் +கனிச்சாறு+ 3. பெருஞ்சித்திரனார் பாவலரேறு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார் 4. தமிழ் மொழியில் படித்தால் +மேன்மை+ அடையலாம் 5. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் மேதினி சுருங்கிவிட்டது குறுவினா 1. தமிழ்மொழியின் செயல்களாக கவிஞர் கூறுவன யாவை? தமிழ் மொழியின் செயல்களாக கவிஞர் கூறுவன : => பொய்கள் அகற்றும் மொழி தமிழ் => அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி => இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி => உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி => உயர்ந்த அறத்தை தரும் மொழி => இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ் மொழி என கவிஞர் கூறுகிறார் 2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்? செந்தமிழின் புகழ் எட்டு திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார். சிறுவினா 1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன ? => தமிழ் மொழி பல நூறு ஆண்டுகளைக் கண்டது => அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றை கொண்டது => பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருப்பது இத்தகைய காரணங்களால் தமிழ் கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி என்று கவிஞர் கூறுகிறார். இயல் ஒன்று - உரைநடை உலகம் ****************************************************************************************** I பொருள் தருக 1. தொன்மை - பழமை 2. மா - விலங்கு II. சேர்த்து எழுதுக கணினி + தமிழ் = கணினித்தமிழ் சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் கோடிட்ட இடங்களை நிரப்புக 1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி 2. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் 3. மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும் குறுவினா 1. தமிழ் மூத்த மொழி எனப்படுவது எதனால்? இலக்கியம் தோன்றியதற்கு பிறகே இலக்கணம் தோன்றும். நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். அவ்வாறெனில் அந்த நூலுக்கு முன்பே பல இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். அதனால் தமிழ் மிகவும் மூத்த மொழி எனப்படுகிறது. 2.நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக: *சிலப்பதிகாரம் *மணிமேகலை *சீவக சிந்தாமணி *வளையாபதி *குண்டலகேசி இயல் 2 - கவிதை பேழை - சிலப்பதிகாரம் ****************************************************************************************** சொல்லும் பொருளும் 1. திங்கள் - நிலவு 2. கொங்கு - மகரந்தம் 3. அலர் - மலர்தல் 4. திகிரி - ஆணைச்சக்கரம் 5. பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில் 6. மேரு - இமயமலை 7. நாமநீர் - அச்சம் தரும் கடல் 8. அளி - கருணை பிரித்து எழுதுக வெண்குடை - வெண்மை + குடை பொற்கோட்டு - பொன் + கோட்டு சேர்த்து எழுதுக கொங்கு + அலர் = கொங்கலர் அவன் + அளி போல் = அவனளி போல் குறுவினா 1. சிலப்பதிகாரம் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தி தொடங்குகிறது? சிலப்பதிகாரம் காப்பியம் நிலா,கதிரவன், மழை ஆகியவற்றை வாழ்த்தி தொடங்குகிறது. 2. இயற்கை போற்றத்தக்கது ஏன்? உலக உயிர்கள் வாழ தேவையான அனைத்து பொருள்களையும் தந்து காப்பதால் இயற்கை போற்றத்தக்கது ஆகும். இயல் 2 - கவிதை பேழை - காணி நிலம் ****************************************************************************************** சொல்லும் பொருளும் காணி - நிலா அளவை குறிக்கும் சொல் மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள் சித்தம் - உள்ளம் பிரித்து எழுதுக நன்மாடங்கள் - நன்மை + மாடங்கள் நிலத்தினிடையே - நிலத்தின் + இடையே சேர்த்து எழுதுக முத்து + சுடர் = முத்துச்சுடர் நிலா + ஒளி = நிலாவொளி பொருத்துக முத்துச்சுடர் போல் - நிலா ஒளி தூய நிறத்தில் - மாடங்கள் சித்தம் மகிழ்ந்திட - தென்றல் குறுவினா 1. காணிநிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை காணி நிலம் பாடலில் பாரதியார் *எனக்கு காணி நிலம் வேண்டும் *தூண்களும் மாடங்களும் கொண்ட வீடும் வீட்டின் அருகே கேணியும் இருத்தல் வேண்டும் * வீட்டை சுற்றி தென்னை மரங்கள் இருக்க வேண்டும் * இரவில் நிலவொளி பரவ வேண்டும். காதுகளில் குயிலோசை கேட்க வேண்டும் * இளந்தென்றல் வீச வேண்டும் என வேண்டுகிறார் 2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக பாரதியார் காணி அளவு நிலத்தில் இயற்கை நிறைந்த சூழலில் வீடு அமைத்து தர வேண்டும் என பராசக்தியிடம் வேண்டுவதிலிருந்து பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பத்தை அறியலாம் இயல் 2 - உரைநடை உலகம் - சிறகின் ஓசை ****************************************************************************************** பிரித்து எழுதுக 1. தட்பவெட்பம் - தட்பம் + வெப்பம் 2. வேதியுரங்கள் - வேதி + உரங்கள் சேர்த்து எழுதுக 1. தரை + இறங்கும் = தரையிறங்கும் 2. வழி + தடம் = வழித்தடம் கோடிட்ட இடங்களை நிரப்புக 1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை +ஆர்டிக் ஆலா+ 2. பறவைகள் வலசை போவதை பற்றி பாடிய தமிழ்ப்புலவர் +சத்திமுத்தப்புலவர்+ 3. பறவைகள் இடம்பெயர்வதற்கு வலசை போதல் என்று பெயர். 4. இந்தியாவின் பறவை மனிதர் +டாக்டர் சலீம் அலி+ 5. பறவைகள் வலசை போக காரணங்களுள் ஒன்று தட்பவெட்ப நிலை மாற்றம். 6. சிட்டுக்குருவி வாழமுடியாத பகுதி +துருவப்பகுதி+ குறுவினா 1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன பறவைகள் உணவு, இருப்பிடம், தட்பவெட்ப நிலை மாற்றம் இனப்பெருக்கம் முதலிய காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன 2. வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை? வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் : *தலையில் சிறகு வளர்தல் *இறகுகளின் நிறம் மாறுதல் *உடலில் கற்றையாக முடி வளர்தல் சிறுவினா 1. சிட்டுக்குருவியின் வாழ்க்கை பற்றி சிறு குறிப்பு எழுதுக சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவையினத்தை சார்ந்தது கூடு கட்டியபின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும் பதினான்கு நாட்கள் அடைகாக்கும் பதினைந்தாவது நாள் குஞ்சுகள் வெளிவரும் துருவ பகுதிகள் தவிர மனிதன் வாழும் எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவிகள் வாழும் 2. வலசை பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை? வலசை பறவைகள் பயணத்தின் போது ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த பாதையிலேயே பறக்கின்றன சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய் நிலங்களுக்கு திரும்புகின்றன சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன பயணம் செய்யும் போது சில வகை பறவைகள் இரை ஒய்வு போன்ற தேவைகளுக்காக தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு. இயல் 2 - விரிவானம் ****************************************************************************************** வினாக்களுக்கு விடை தருக கிழவனும் கடலும் படக்கதையை சொந்த நடையில் கதையாக கூறுக: 'கிழவனும் கடலும்' என்னும் படக்கதையின் நாயகன் சாண்டியாகோ. அவர் வயது முதிர்ந்த மீனவர். கடலுக்கு மீன் பிடிக்க செல்வது தான் அவரின் தொழில். கடந்த எண்பத்து நான்கு நாட்களாக அவருக்கு மீன் எதுவும் கிடைக்கவில்லை. மனோலின் என்னும் சிறுவன் மீன்பிடிக்க கற்றுக்கொள்வதற்காக அவருடன் மீன் பிடிக்க சென்று கொண்டிருந்தான். ஆனால் அவருடன் மீன் பிடிக்க சென்றால் மீன் எதுவும் கிடைக்கவில்லை என அவனது பெற்றோர் அவனை வேறு படகிறகு அனுப்பி விட்டனர். எண்பத்து ஐந்தாவது நாள் சாண்டியாகோ மீன் கிடைக்காமல் கரைக்கு திரும்ப கூடாது என்னும் முடிவுடன் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார். தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கிறார். மீன் எதுவும் சிக்கவில்லை. மறுநாள் நண்பகல் வேளையில் மிகப் பெரிய மீன் தூண்டிலில் மாட்டிக்கொள்கிறது. சாண்டியாகோ தன்னுடைய வலிமை முழுவதையும் திரட்டி மாலை நேரத்தில் அந்த மீனை பிடித்து படகில் கட்டுகிறார். சுறாமீன்கள் அந்த மீனை உண்ண முயற்சிக்கின்றன. அவற்றையும் கொன்று வீழ்த்துகிறார். கரைக்கு வந்து சேர்ந்த முதியவர் சுறாக்கள் தின்றது போக மீனின் தலையும் எலும்பும் மட்டுமே எஞ்சியிருப்பதை கண்டு திடுக்கிட்டார். தன்னை பார்க்க வந்த மனோலினிடம் நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார் சாண்டியாகோ. உங்கள் திறமையும் விடாமுயற்சியும் வென்றுவிட்டன. இனி யாரும் பழி கூற முடியாது என மனோலின் கூறிய வார்த்தைகளை கேட்டு சாண்டியாகோ மகிழ்ச்சியடைகிறார். நீதி : விடாமுயற்சி வெற்றி தரும் 2. சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது? சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர். விடாமுயற்சி வெற்றியை தரும் என்னும் கருத்தை தன் உழைப்பின் மூலம் உலகிற்கு கற்று தந்த உன்னத மனிதர் இயல் 2 : வாழ்வியல் : திருக்குறள் ****************************************************************************************** குறுவினாக்கள் 1. உயிருள்ள உடல் எது? அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். 2. எழுத்துக்களுக்கு தொடக்கமாக அமைவது எது? எழுத்துக்களுக்கு தொடக்கமாக அமைவது அகரம் ஆகும் 3. அன்பிலார் அன்புடையார் செயல்கள் யாவை? *அன்பிலார் எல்லா பொருள்களையும் தமக்கே உரிமையாக்கி கொள்வர் *அன்புடையார் தம் உடம்பாலும் மற்றவர்க்கு உரியவராய் இருப்பர். இயல் 3: கவிதை பேழை : அறிவியல் ஆத்திச்சூடி ****************************************************************************************** பொருள் எழுதுக 1. ஐயம் - சந்தேகம் 2. ஒளடதம் - மருந்து 3. ஊக்கம் - தளராமுயற்சி 4. அணுகு - நெருங்கு 5. ஒருமித்து - ஒன்றுபட்டு 6. இயன்றவரை - முடிந்தவரை கோடிட்ட இடங்களை நிரப்புக: 1. உடல் நோய்க்கு ஒளடதம் தேவை 2. நண்பர்களுடன் ஒருமித்து விளையாடு. பிரித்து எழுதுக: 1. கண்டறி - கண்டு + அறி 2. ஓய்வற - ஓய்வு + அற சேர்த்து எழுதுக 1. ஏன் + என்று - ஏனென்று 2. ஒளடதம் + ஆம் - ஒளடதமாம் எதிர்சொல் எழுதுக : 1. அணுகு x விலகு 2. ஐயம் x தெளிவு 3. ஊக்கம் x சோர்வு 4. உண்மை x பொய்மை குறுவினா மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது? மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது அனுபவம் ஆகும் சிறுவினா பாடலின் கருத்தை உங்களின் சொந்த நடையில் எழுதுக ஏன்? எப்படி? என்னும் வினாக்கள் மூலம் அறிவியல் சிந்தனை கொள்ள வேண்டும். ஒன்றைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதன் வாயிலாகத்தான் உண்மை வெளிப்படும். நம் நிலைக்கு ஏற்ப இயன்றவரை புரிந்து கொள்ளவேண்டும். தொய்வில்லாத ஈடுபாட்டுடன் செயலை செய்ய வேண்டும்.இலக்கை எட்டியே ஆக வேண்டும் என்னும் மன எழுச்சியே வெற்றியை தரும்.என்றும் அறிவியல் வெல்லும் என்பதற்கு சான்று இன்றைய அறிவியலால் உருவாகியுள்ள கருவிகள் ஆகும். எந்த ஒன்றை பற்றியும் அவசரப்பட்டு அரைகுறையாய் கூறக்கூடாது. ஐயங்கள் அனைத்தும் களைந்து அப்புறம் கூற வேண்டும். மற்றவரோடு முரண்படாது கருத்தாலும், செயலாலும் ஒருமித்துச் செயல்பட வேண்டும். ஓய்வின்றி உழைத்தால் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் பட்டு அறியும் அனுபவமே மருந்தாய் உதவும். இயல் 3 - கவிதை பேழை - அறிவியலால் ஆள்வோம் ****************************************************************************************** பிரித்து எழுதுக ஆழ்கடல் - ஆழம் + கடல் விண்வெளி - விண் + வெளி சேர்த்து எழுதுக நீலம் + வான் - நீலவான் இல்லாது + இயங்கும் - இல்லாதியங்கும் குறுவினா 1. செயற்கை கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது? * செயற்கை கோள் உலக செய்திகளை உடனுக்குடன் அறியப் பயன்படுகிறது. * என்னென்ன கனிமங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அறியப் பயன்படுகிறது * என்று எவ்வளவு மழை பொழியும், எத்திசை நோக்கி எவ்வளவு வேகத்தில் காற்று வீசும் என்பனவற்றை முன்னரே அறியவும் பயன்படுகிறது 2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும் எதிர்காலத்தில் விண்ணிலுள்ள கோள்களில் நகரங்கள் அமைத்து அடிக்கடி அக்கோள்களுக்கு சென்று வருவதற்கு ஏற்ற விண்வெளி பாதையையும் அமைத்து வாழும் அளவுக்கு நாளைய மனிதனின் வாழ்வு இருக்கும் இயல் 3 - உரைநடை உலகம் - கனியனின் நண்பன் ****************************************************************************************** பிரித்து எழுதுக 1. நின்றிருந்த - நின்று + இருந்த 2. அவ்வுருவம் - எ + உருவம் சேர்த்து எழுதுக 1. மருத்துவம் + துறை = மருத்துவத்துறை 2. செயல் + இழக்க - செயலிழக்க எதிர்ச்சொல் நீக்குதல் x சேர்த்தல் எளிது x அரிது கோடிட்ட இடங்களை நிரப்புக 1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்க கண்டுபிடித்தவை தானியங்கிகள் 2. தானியங்கிகளுக்கும் எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு செயற்கை நுண்ணறிவு 3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் *டீப்புளூ* 4. 'சோபியா' ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு *சவுதி அரேபியா* xxxxxxxx குறுவினா 1. 'ரோபோ' என்னும் பெயர் எவ்வாறு உருவானது? காரல் கபெக் என்பவர் 'செக்' நாட்டினை சேர்ந்தவர். இவர் 1920ம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் அவர் 'ரோபோக்கள்' ஒரு தொழிற்சாலையில் செய்வதாய்க் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் உருவானது. 2. 'டீப்புளூ' ' மீத்திறன் கணினி பற்றி எழுதுக. ஐ.பி.எம்.நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மீத்திறன் கணினி டீப்புளு ஆகும்.அக்கணினி 19997ஆம் ஆண்டு சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்பரோவ் என்பவரோடு விளையாடி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றது. சிறுவினா 1. எந்திர மனிதனின் பயன்களை விளக்குக. எந்திர மனிதனின் பயன்கள் : அது வீட்டு வேலைகளைச் செய்யும். கற்க உதவி செய்யும். அலுவலக வேலைகளை முடிக்க உதவும். கணக்குகளை முடித்துத் தரும். சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்யும். உணவகங்களில் உணவு பரிமாறும். பொது இடங்களில் வழி காட்டும். வெடிகுண்டுகளைச் செயல் இழக்கச் செய்யும் 2. துருவ பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திர மனிதர்களை அனுப்புவதன் காரணம் என்ன? துருவ பகுதிகளில் வெப்பநிலை உரை நிலைக்கும் கீழே இருக்கும். அங்கு மனிதனால் செல்ல இயலாது. எனவே அப்பகுதிகளில் ஆய்வு செய்ய இயந்திர மனிதர்களை அனுப்புகிறார்கள். பருவம் 2 - இயல் 1 - கவிதை பேழை - மூதுரை ****************************************************************************************** பிரித்து எழுதுக 1. இடமெல்லாம் - இடம் + எல்லாம் 2. மாசற - மாசு + அற சேர்த்து எழுதுக 1. குற்றம் + இல்லாதவர் - குற்றமில்லாதவர் 2. சிறப்பு+ உடையார் - சிறப்புடையார் கோடிட்ட இடங்களை நிரப்புக 1. மாணவர்கள் நூல்களை +மாசற+ கற்க வேண்டும் 2. மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் சொல்லும் அறிவுரை என்று பொருள் இயல் 1 - கவிதை பேழை - துன்பம் வெல்லும் கல்வி, ****************************************************************************************** கோடிட்ட இடங்களை நிரப்புக 1. மாணவர்கள் பிறர் தூற்றும்படி நடக்க கூடாது. 2. நாம் மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும் பிரித்து எழுதுக கைப்பொருள் - கை + பொருள் மானமில்லை - மானம் + இல்லை குறுவினா 1. நாம் யாருடன் சேரக்கூடாது நாம் தன்மானமில்லா கோழைகளுடன் சேரக்கூடாது 2. எதை நம்பி வாழக்கூடாது மற்றவர்களின் செல்வத்தை நம்பி வாழக்கூடாது 3. நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று பட்டுக்கோட்டையார் கூறுகிறார் * நாம் கற்றதோடு நிறுத்திவிடாமல் கற்றதன் பயனை பின்பற்றி வாழவேண்டும் * நாட்டின் நெறி தவறி நடக்காமல் நல்லவர்கள் குறை கூறாமல் நாம் வாழ வேண்டும் * பெரியோர் கூறும் அறிவுரையை கேட்டு பிறரிடம் பழகும் முறையிலும், பேசும் முறையிலும் பண்பு நெறி தவறாமல் வாழ வேண்டும். *அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்து வெற்றிகளையும் விருதுகளையும் பெற்று பெருமையோடு நாம் வாழ வேண்டும். * பெற்ற தாயின் முகமும் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழவேண்டும். 4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்? மேதைகள் சொல்லிய சிந்தனைகளை பின்பற்றி வாழ்ந்தால் வெற்றிகளையும் விருதுகளையும் பெற்று பெருமையோடு நாம் வாழலாம். இயல் 1 - உரைநடை உலகம் - கல்வி கண் திறந்தவர் ****************************************************************************************** I . பிரித்து எழுதுக 1. பசியின்றி - பசி+இன்றி 2. படிப்பறிவு - படிப்பு + அறிவு 3. காட்டாறு - காடு + ஆறு கோடிட்ட இடங்களை நிரப்புக 1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் *ஊரில் பள்ளிக்கூடம் இல்லை* 2. குழந்தைகள் பள்ளியில் ஏற்ற தாழ்வின்றி படிக்க சீருடைத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார் 3. காமராசரை கல்வி கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் தந்தை பெரியார். இயல் 1 - கற்கண்டு - இன எழுத்துக்கள் சிறுவினா 1. இன எழுத்துக்கள் என்றால் என்ன எழுத்துக்கள் பிறக்கும் இடம் ஒலிக்கும் முயற்சி ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும். ஆறு வல்லின எழுத்துக்களும் ஆறு மெல்லின எழுத்துக்களும் இந எழுத்துக்கள் ஆகும் எ. கா. திங்கள், மஞ்சள்,மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல் இயல் 2 : திருக்குறள் ****************************************************************************************** பிரித்து எழுதுக 1. பொருளுடைமை - பொருள் + உடைமை 2. உள்ளுவதெல்லாம் - உள்ளுவது + எல்லாம் 3. பயனிலா - பயன் + இலா கோடிட்ட இடங்களை நிரப்புக 1. நம் முகம் மாறினால் விருந்தினரின் முகம் *வாடும்* 2. ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களை பேசமாட்டார்கள் இயல் 2 - கவிதை பேழை - கண்மணியே கண்ணுறங்கு ****************************************************************************************** பிரித்து எழுதுக பாட்டிசைத்து - பாட்டு + இசைத்து கண்ணுறங்கு - கண் + உறங்கு சேர்த்து எழுதுக வாழை + இல்லை - வாழையிலை கை + அமர்த்தி - கையமர்த்தி சொல்லும் பொருளும் நந்தவனம் - பூஞ்சோலை பண் - இசை பார் - உலகம் இளைத்து - பதித்து தொகை சொற்களின் விளக்கம் முத்தேன் - கொம்புத்தேன் , மலைத்தேன் , கொசுத்தேன் முக்கனி - மா, பலா, வாழை முத்தமிழ் - இயல் இசை நாடகம் இயல் 2- கவிதை பேழை - ஆசாரக்கோவை ****************************************************************************************** சேர்த்து எழுதுக 1. அறிவு+உடமை - அறிவுடைமை 2. இவை + எட்டும் - இவையெட்டும் பிரித்து எழுதுக நன்றியறிதல் = நன்றி + அறிதல் பொறையுடைமை - பொறை + உடமை சொல்லும் பொருளும் 1. நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை 2. ஒப்புரவு - எல்லாரையும் சமமாக பேணுதல் 3. நட்டல் - நட்பு கொள்ளுதல் கோடிட்ட இடங்களை நிரப்புக 1. ஆசாரக்கோவை என்பதற்கு *நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு* என்பது பொருள் 2. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் 3. பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொருத்துக்கொள்வது பொறை ஆகும் இயல் 2 ; கற்கண்டு - மயங்கொலிகள் ****************************************************************************************** குறுவினா 1. மயங்கொலி எழுத்துக்கள் யாவை ண,ன,ந,ல,ழ,ள,ர,ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துக்கள் ஆகும் 2. ண,ன,ந ஆகிய எழுத்துக்கள் பிறக்கும் முறையை கூறுக ண - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் ணகரம் பிறக்கிறது ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன்பகுதியை தொடுவதால் னகரம் பிறக்கிறது ந - நாவின் நுனி மேல்வாய் பல்லின் அடிப்பகுதியை தொடுவதால் நகரம் பிறக்கிறது இயல் 2 - உரைநடை உலகம் - தமிழர் திருவிழா ****************************************************************************************** பிரித்து எழுதுக பொங்கலன்று - பொங்கல் + அன்று போகிப்பண்டிகை - போகி + பண்டிகை கோடிட்ட இடங்களை நிரப்புக 1. கதிர் முற்றியதும் அறுவடை செய்வர் 2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் தோரணம் கட்டுவர் எதிர்சொல் இன்பம் x துன்பம் உதித்து x மறைத்து இயல் 2 - உரைநடை உலகம் - தமிழர் திருவிழா ***************************************************************************************** திருக்குறள் குறுவினா 1. எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று 2. எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்? அடுத்தவர் பொருளை களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூட தீமையானது. 3. ஆக்கம் யாரிடம் வழி கேட்டு செல்லும் தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழி கேட்கும் 4. நாம் எத்தகைய சொற்களை பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார் நாம் பயனுடைய சொற்களை மட்டுமே பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார். Half Yearly Examination Test Portions ****************************************************************************************** இயல் 1 மூதுரை துன்பம் வெல்லும் கல்வி கல்வி கண் திறந்தவர் நூலகம் நோக்கி இன எழுத்துக்கள் இயல் 2 ஆசாரக்கோவை கண்மணியே கண்ணுறங்கு தமிழர் பெருவிழா மனம் கவரும் மாமல்லபுரம் மயங்கொலிகள் திருக்குறள் ***** UPDATED TO NET UPTO HERE ***** 17-Dec I. சொல்லும் பொருளும் 1.மாசற - குற்றம் இல்லாமல் 2.சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்தால் 3.தேசம் - நாடு 4.தூற்றும்படி - இகழும்படி 5.மூத்தோர் - பெரியோர் 6.மேதைகள் - அறிஞர்கள் 7.மாற்றார் - மற்றவர் 8.நெறி - வழி 9.வற்றாமல் - குறையாமல் 10.நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை 11.ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல் 12.நட்டல் - நட்பு கொள்ளுதல் 13.நந்தவனம் - பூஞ்சோலை 14.பார் - உலகம் 15.பண் - இசை 16.இழைத்து - பதித்து II. பின்வரும் சொற்களை திருத்தி எழுதுக பிழையான சொல் திருத்தம் தெண்றல் தென்றல் கன்டம் கண்டம் நன்ரி நன்றி மன்டபம் மண்டபம் வன்டி வண்டி III. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக 1. சிரம் என்பது *தலை * (தலை/தளை) 2. இலைக்கு வேறு பெயர் *தழை* (தளை /தழை) 3. வண்டி இழுப்பது *காளை* (காலை/ காளை ) 4. கடலின் வேறு பெயர் *பரவை * ( பரவை / பறவை) 5. பறவை வானில் *பறந்தது* (பரந்தது / பறந்தது) 6. கதவை மெல்லத் *திறந்தான்* (திறந்தான்/ திரந்தான் ) 7. பூ மணம் வீசும் (மனம் / மணம் ) 8. புலியின் கண் சிவந்து காணப்படும் (கன் / கண் ) 9. குழந்தைகள் பந்து விளையாடினர் (பந்து/ பன்து ) 10. வீட்டு வாசலில் கோலம் போட்டனர் (கோலம்/ கோளம் )